தொ லைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று நடைபெற்றுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 31 ஜனவரி, 2013
வியாழன், 8 செப்டம்பர், 2011
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது சந்தேகநபருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 64 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
லேபிள்கள்:
மட்டக்களப்பு,
வாழைச்சேனை
சனி, 23 ஜூலை, 2011
புகைப்பிடிப்பதை கண்டித்ததற்காக தற்கொலை செய்த 14 வயது சிறுவன்
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் 14 வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். விநாயகபுரம் 3ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் சிறிதரன் தனுஸ்காந்தன் என்ற பாடசாலையை விட்டு இடை விலகிய சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழன், 5 மே, 2011
சிறுமியின் காலைத் தொட்டு பாலியல் தொல்லை செய்ததாக வழக்கு
ம ட்டக்களப்பு வாழைச்சேனை நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை விசித்திரமான வழக்கொன்று இடம்பெற்றது. 10 வயது சிறுமியின் நாணத்தை கெடுக்கும் விதத்தில் அவரது காலைத் தொட்டு பாலியல் தொல்லை செய்தார் என குற்றம் சுமத்தி ஓட்டமாவடியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக வழக்கு நடைபெற்றது.
செவ்வாய், 3 மே, 2011
14வயது சிறுமி 5மாதக் கர்ப்பிணி
ம ட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 48 வயதுடைய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு
வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
வியாழன், 24 மார்ச், 2011
14 வயது சிறுமி மீது 55 வயதான நபர் பாலியல் வல்லுறவு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகல்சேனையின் பூலாக்காடு பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியை 55 வயதான நபரொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வியாழன், 6 ஜனவரி, 2011
14 வயதான சிறுமியை திருமணம் செய்த இளைஞன் கைது
14வயதான சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதான ஓர் இளைஞனை வாழைச்சேனை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
திங்கள், 29 நவம்பர், 2010
8 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயது நபர் கைது
வாழைச்சேனை நாசிவன்தீவு பிரதேசத்தில் 8 வயது சிறுமியொருத்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயதான நபரொருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளி, 26 நவம்பர், 2010
எட்டு வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு; ஒருவர் கைது
வாழைச்சேனை, கறுவாக்கேணி பகுதியில் எட்டு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சனி, 6 நவம்பர், 2010
வாழைச்சேனையில் கைக்குண்டுகள் மீட்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணைடிக் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
சனி, 16 அக்டோபர், 2010
வெள்ளி, 15 அக்டோபர், 2010
மட்டக்களப்பில் முஸ்லிம் மாணவி தற்கொலை
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிதிதென்ன கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் இன்று காலை தற்கொலை செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய், 12 அக்டோபர், 2010
வாழைச்சேனையில் விவசாயி ஒருவர் யானை தாக்கி பலி
வாகனேரி அடிச்சரவெட்டி எனும் கிராமத்தில் விவசாயம் செய்யப்பட்ட காணியில் அமைக்கப்பட்டிருந்த குடிசை ஒன்றுக்குள் இன்று அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை அங்கு வந்த யானை தாக்கியுள்ளது. படு காயமடைந்த விவசாயி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
வியாழன், 7 அக்டோபர், 2010
49 நாட்களுக்கு பின் வீடு திரும்பிய வாழைச்சேனை மீனவர்கள் மூவர்
வாழைச்சேனை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மூன்று மீனவர்கள், 49 தினங்களுக்கு பின்பு நேற்று புதன்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளனர்
ஞாயிறு, 18 ஜூலை, 2010
வாழைச்சேனையில் இராணுவவீரர் தற்கொலை
வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமையில் இருந்த இராணுவ வீரரொருவர் இன்று அதிகாலை தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புதன், 7 ஜூலை, 2010
தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; வாழைச்சேனையில் சம்பவம்
ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)