அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 29 நவம்பர், 2010

8 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயது நபர் கைது

வாழைச்சேனை நாசிவன்தீவு பிரதேசத்தில் 8 வயது சிறுமியொருத்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயதான நபரொருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுமி நேற்றுமாலை தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பும்போது இந்நபர் மேற்படி குற்றத்தை புரிந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு குறித்த நபரை கைது செய்த பொலிஸார் இன்று திங்கட்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவித்தனர். மேற்படி சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
வாழைச்சேனை பிரதேசத்தில் ஒரு வாரகாலத்திற்குள் 8 வயதான 3 சிறுவர் சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG