அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 29 நவம்பர், 2010

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்!

ந்திய அரசின் நிதியுதவியுடன் வடபகுதியில் அமைக்கப்படவுள்ள ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அரியாலையில் இன்று இடம்பெற்றுள்ளது.புகைப்படம் இணைப்பு
இந்நிகழ்வில் பெயர்ப்பலகையினை எஸ்.எம். கிருஸ்ணா திரைநீக்கம் செய்து வைத்ததுடன் அங்கு அமையப்பெறவுள்ள ஒருதொகுதி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.
அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் இந்திய அரசு வழங்குகின்ற இந்த வீட்டுத்திட்ட உதவிக்கு இலங்கை அரசின் சார்பில் தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்வில் இலங்கை வெளிவிகார அமைச்சர் ஜி.ஏல். பீரிஸ் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் முருகேசு சந்திரகுமார். சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமராவ் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.









0 கருத்துகள்:

BATTICALOA SONG