அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 7 ஜூலை, 2010

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு; வாழைச்சேனையில் சம்பவம்

ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

35 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மரணமாகியுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், இறந்தவரின் உடலை வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்தனர்.
சடலத்தைப் பார்வையிட்ட வாழைச்சேனை நீதிவான் ரி.சரவணராஜா, குறித்த பெண்ணின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாகவும் இதனால் மரண விசாரணைக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG