அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஜூலை, 2010

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் தம்மீது அவதூறுகளைப் பரப்புவோர் குறித்து சபாநாயகர் அவர்களைச் சந்தித்து பேசுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உத்தேசம்

.நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமையைத் தவறான முறையில் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது ஆதாரமற்ற அவதூறுகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரப்பி வருகின்றனர். இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர் பீடத்தினரும் கட்சி சார்ந்த நாடாளுமன்றக் குழுவினரும் ஆலோசித்து வருகின்றனர்
.இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்கள் அரசியல் தீர்வு குறித்து கட்சி முன்வைத்திருக்கும் திட்டங்களை நோக்கி கிடைத்திருக்கும் சகல தரப்பு அங்கீகாரம் மற்றும் மக்கள் பணிகள் குறித்து மக்களிடமிருந்து பெருகிவரும் பேராதரவு போன்றவற்றைக் கண்டு சகிக்க முடியாத சிலர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது திட்டமிட்ட முறையில் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் ஆனாலும் இது குறித்து போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்று
இடைவிடா பணியினைக் கட்சி முன்னெடுத்து வருகின்ற போதிலும் கட்சியின் ஆதரவாளர்களும் கல்வி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பல்துறை சார்ந்தவர்களும் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களோடு தொடர்பு கொண்டு இது குறித்து கடந்த சில நாட்களாக பேசி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கட்சி மீது அவர்கள் கொண்டிருக்கும் காத்திரமான அக்கறையினையும் மன விருப்பங்களையும் கருத்தில் கொண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினர் நாடாளுமன்றச் சபாநாயகர் அவர்களைச் சந்தித்துத் பேசுவது எனத் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தி. மகேஸ்வரன் மற்றும் சாவகச்சேரி மாணவன் திருச்செல்வம் கபில்நாத் ஆகிய இருவர் மீதான திட்டமிட்ட படுகொலைச் சம்பவங்கள் குறித்து திட்டமிட்ட வகையில் பழி சுமத்தும் நோக்கிலான பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்விரு வழக்குகளும் இன்னமும் நீதிமன்றத்தில் இருந்து வருகின்ற இதேவேளை தி. மகேஸ்வரன் அவர்கள் மீதான படுகொலை குறித்து கைது செய்யப்பட்டிருப்பவர் புலிகள் இயக்க உறுப்பினர் என்பது விசாரணைகளின் மூலம் ஏற்கனவே தெரியவந்துள்ளது.
இதேவேளை திருச்செல்வம் கபில்நாத் அவர்கள் மீதான படுகொலை குறித்த வழக்கு இன்னமும் நீதிமன்றில் இருந்து வருவதோடு கொலைக்குற்றவாளியான ஜீவன் என்ற புலிகள் இயக்க உறுப்பினர் இந்த படுகொலை குறித்து தேடப்பட்டு வருவதோடு இவ்வழக்கின் நியாயத்தீர்ப்பின் மூலம் உண்மைகள் வெளிவருவதற்கு முன்பாகவே அவதூறுகளை பரப்பும் வகையிலான பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்களில் சாவகச்சேரி நீதிபதி அவர்களது இடமாற்றமும் ஒன்றாகும். இது இவ்வாறிருக்க இந்த இடமாற்றம் குறித்து தவறான கற்பனைக் கதைகளை உருவாக்கி அரசியல் தலையீட்டின் காரணமாகவே இந்த இடமாற்றம் நிகழ்ந்ததாகச் சிலர் குற்றம் சுமத்தியும் வருகிறார்கள். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்ட அவதூறுகளை பரப்பும் அவசரத்தில் தமது கண்மூடித்தனமான கற்பனைக்கதைகளால் யாழ்குடாநாட்டு தீவகப் பகுதிப் பெண்கள் சமூகத்தவர்களும் கேவலப்படுத்தப்படுகின்றார்கள் என்பதை மறந்து விடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG