அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 23 ஜூலை, 2011

புகைப்பிடிப்பதை கண்டித்ததற்காக தற்கொலை செய்த 14 வயது சிறுவன்

ட்டக்களப்பு, வாழைச்சேனையில் 14 வயது சிறுவன் ஒருவன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளான். விநாயகபுரம் 3ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் சிறிதரன் தனுஸ்காந்தன் என்ற பாடசாலையை விட்டு இடை விலகிய சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் புகைப்படித்துக்கொண்டிருப்பதை கண்டுள்ள அவனது சிறிய தாயார், இது குறித்து அவனது தந்தைக்கு அறிவிப்பதாக் கூறியதை அடுத்து தனது பாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கு அறையினுள் கதவை மூடிவிட்டு சீலைத்துணியினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை புரிந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் வழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG