உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இறுதி நாள் இன்று ஆகும்.
இன்றைய நிகழ்விற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார்.
மூன்றாம் நாளான இன்றும் மங்கள இசையுடன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆரம்பமாகிறது.
இன்றைய நிகழ்வில் கவியரங்கம், பட்டிமன்றம் சிறப்புக் கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் ஆகியன இடம்பெறவுள்ளன.
தமிழ்நாட்டின் கோவை நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், மாநாட்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று கோவை சென்றார். பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க, அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தமிழ்நாட்டின் கோவை நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டையொட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இராட்சத பலூன் ஒன்று பறக்க விடப்பட்டது. அத்துடன் சுமார் 45ஏக்கர் நிலபரப்பில் 20 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள செம்மொழி பூங்கா குறித்த ஒளி - ஒலி காட்சியினை தமிழக முதல்வர் கருணாநிதி பார்வயிட்டார். இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்