அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2012

எஸ்.எஸ்.பி. ரணகலவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்


ம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் ஹனீபா (மதனி) மற்றும் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் எம்.தவம் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுவினை தாக்கல் செய்த பின்னர் இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளரும், கல்முனை பிரதி மேயரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், "அமைச்சர் அதாவுல்லாவிற்கு ஆதரவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார். இதனால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுதம் வன்முறைகள் தொடர்பில் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவிற்கு எதிராக பல முறைப்பாடுகளை மேற்கொண்ட போதிலும் பொலிஸ் மா அதிபரினால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன், கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகானங்கள் அக்கரைப்பற்றில் வைத்து தாக்கப்பட்டமை தொடபில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க கோரியும் இதுவரை வழங்கப்பட்டவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார். இதனால், இவரை உடனடியாக இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவினை கோரியுள்ளளோம்' எனவும் அவர் குறிப்பிட்டார். உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டும் போது சிரேஷ்ட சட்டத்தரணிகாள கலாநிதி ஜயம்பதி விக்ரமதுங்க மற்றும் நிசாம் காரியப்பர் ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG