அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2012

கோட்டாபயவை முட்டாளாக்க யாராலும் முடியாது: கொழும்பு மேயர் முஸம்மில்


பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை எவரும் முட்டாளாக்க முடியாது என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறியுள்ளார். கொம்பனித்தெரு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனா சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷம் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. ' கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்குமாறு பலர் என்னை வலியுறுத்தினர். ஆனால் அவரை யாரும் முட்டாளாக்க முடியாது என்பதை நான் அறிவேன். அப்படி செய்வதற்கு ஒரு ஜெனரல் முயன்றார். தற்போது அவர் வீPழ்ந்துவிட்டார்' என மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறினார். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை மேயர் நிராகரித்ததாக எதிர்க்கட்சி (ஐ.ம.சு.கூ) உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி, கொழும்பு மாநகர சபையின் செங்கோலை நேற்று கைப்பற்றி ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG