அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

பொன்சோவின் 30 மாத கால சிறை தண்டனைக்கு எதிரான மனு தள்ளுபடி


ரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சோவிற்கு வழங்கப்பட்ட 30 மாத கால சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுவை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
எரிக் பஸ்நாயக்க, ஏ.டபிள்யூ. ஏ. சலாம், உபாலி அபேரத்ன ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழாம் ஏகமனதாக இத்தீர்ப்பை வழங்கியது. தனது மருமகனான தனுன திலகரட்ன இராணுவத்தினால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை புரிந்தமை குறித்து வெளிப்படுத்தத் தவறியதாக இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். மனுதாரர் ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் என்பதை கருத்திற்கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் வழக்குச்செலவுத் தொகையை செலுத்தும்படி உத்தரவிடவில்லை.

0 கருத்துகள்:

BATTICALOA SONG