
ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்கள் இன்று மாலை தனது 77வது வயதில் காலமானார். இடதுசாரிக் கொள்கைகளை ஏற்றிருந்த இவர் 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முதலாக பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இதன் பின்னர் 2000ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பனை அபிவிருத்திச் சபைத் தலைவராக பணியாற்றிய இவர் கலைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1934ம் ஆண்டு கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தில் பிறந்த இவர் இன்று 13.11.2011 காலமனார். இவரது பூதவுடல் வைக்கப்பட்ட இல்லத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் பூதவுடலுக்கு மலர்மாலை சாத்தி அஞ்சலியை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயரிற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். இதன் போது அமைச்சர் அவர்களுடன் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின் உதயன் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) ஆகியோர் உடனிருந்தனர். அமரர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக