அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 5 அக்டோபர், 2011

போர்க் குற்ற விசாரணையினை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை

போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, சர்வதேச மன்னிப்புச் சபை மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் நிபுணரான ஜிம் மக் டொனால்ட் இந்த மனுவை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளார். போரின் போது விடுதலைப்புலிகளும், அரச படையினரும் போர்க் குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்திருந்தனர் எனவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. தமது படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு காத்திரமான விசாரணைகளை மேற் கொள்ளத் தவறியுள்ளது எனவும் இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு போரின் போது இரு தரப்பினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு வெளிப்படையான ஆதரவை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் இலங்கையில் இடம் பெற்ற குற்றச் செயல்களை மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான நகர்வில் முதலடியை எடுத்து வைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 29 ஆம் திகதிக்கு முன்னர் ஐயாயிரம் பேரின் கையொப்பங்களுடன் இந்த மனுவைக் கையளித்தால், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளைமாளிகை தமக்கு அறிவித்துள்ளது எனவும் ஜிம் மக் டொனால்ட் தெரிவித்துள்ளார். எனினும் மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கும் போர்க் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அவை அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என்று அவை கூறுகின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG