அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

புலனாய்வு அதிகாரிகளாக நடித்து, பெண்களிடம் நகைகளை திருடிய குழு கைது

கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் பொலிஸ் புலன்விசாரணை பிரிவு அதிகாரிகள் போல் நடித்து, வயதுபோன பெண்களின் நகைகளை பல வருடங்களாக திருடிவந்த குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்கள் மூன்று பேரை தெமட்டகொட பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்நத அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர், ஜனித் டி சில்வா தலைமையிலான தெமட்டகொட பொலிஸ் புலன் விசாரணை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று இந்த சந்தேக நபர்கள் தெமட்டகொடையில் தமது நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கைது செய்தது. இந்த குழுவினர் வயது போன பெண்களை அணுகி, பொலிஸார் போல் நடித்து, சோதனைக்காக பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும் எனக் கூறி, ஒரு முச்சக்கர வாகனத்தில் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். முச்சக்கர வாகனத்தில் செல்லும் போது நகைகளை கழற்றி பைக்குள் வைக்கும்படி கூறுவர். பின்னர் பையை சோதிப்பது போல பாவனை செய்து பையிலுள்ள நகைகளை எடுத்துக்கொண்டு அப்பெண்களை இறக்கிவிட்டு போய்விடுவர். இந்த கும்பல் மருதானை, தெமட்டகொடை, வெள்ளவத்தை, தெஹிவளை, வெல்லம்பிட்டிய பகுதிகளில் பல வருடங்களாக தமது 'தொழிலை' செய்து வந்ததாக அறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பொலிஸார், 39 மில்லியன் ரூபா பெறுமதியான 106 கவரன் தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG