அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

மின்வெட்டு குறித்த ஜெயலிதா வார்த்தைகள் அவரையே திருப்பித் தாக்குகின்றன- கருணாநிதி

தி முக ஆட்சிக்காலத்தில் நிலவிய மின்தட்டுப்பாடு குறித்து கேவலமாக விமர்சித்தார் ஜெயலலிததா. இன்று அவரது வார்த்தைகள் அவரையே திருப்பித் தாக்கி வருகின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வசர் ஜெயலலிதா நான்கு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்சார குறைபாடு சீர் செய்யப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் வெட்டு அறவே நிக்கப்படும் வகையில் தனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியிருக்கிறார். மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களான நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடக மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலையம், ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாத்ரி அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கப் பெற வேண்டிய மின்சாரத்தின் அளவிலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக கடந்த நான்கு நாட்களில் தமிழகத்திற்கு கிடைக்கப்பெற வேண்டிய மின்சாரத்தின் அளவில் 1028 மெகாவாட் குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் எதிர்பாராத மின் தடை ஏற்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கி தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரக் குறைபாட்டை உடனடியாக ஈடு செய்ய வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் தி.மு.கழக ஆட்சியில் மின்சாரத்தை வாங்கப் போகிறோம் என்று தெரிவித்த நேரத்தில் ஜெயலலிதா காற்றாலை உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருந்தால், மின் தடை, மின் வெட்டு ஆகியவை ஏன் ஏற்படுகின்றன? அண்டை மாநிலங்களில் இருந்து ஏன் மின்சாரத்தை வாங்குகிறார்கள்.? என்றெல்லாம் கேள்வி கேட்டார். இன்று மின்சாரத்தில் மட்டுமல்ல, கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்களும், தொழிலாளர்களும் கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பதினைந்து லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. தி.மு.க.வினர் மீது சங்கிலித் தொடர் போல வழக்குகள் போடும் நிலை, முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் சோதனையிடுகின்ற நிலை உள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு குறித்து கேவலமாக விமர்சித்துப் பேசினார் ஜெயலலிதா. ஆனால் இன்று அவரது வார்த்தைகளே அவரை திருப்பிக் கேட்க ஆரம்பித்துள்ளன. அரசு தனது கவனத்தை ஆரோக்கியமற்ற பாதையிலிருந்து திருப்பி மக்கள் பிரச்சினைகளிலே ஆக்க பூர்வமாக கவனத்தைச் செலுத்துவதே நமது மாநிலத்துக்கு நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG