அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடை செய்து கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்தவேண்டும்:குணதாஸ அமரசேகர.

ரசாங்கத்திற்கும் பாதுகாப்பு தரப்புக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு இரகசிய தகவல்களை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடை செய்து கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்தவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் கூட்டமைப்புடன் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்கக் கூடாது. இனப்பிரச்சினையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளை உடனடியாக இரத்து செய்து விட்டு நாட்டிற்கு எதிரான சக்திகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூறுகையில், புலி பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவுதான் கூட்டமைப்ப்பாகும், இவர்கள் தொடர்ந்தும் இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். தேசிய அரசியலில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்படுவதை இனி ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். அரசிற்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு தகவல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இது தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தி உண்மை நிலையை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு நாட்டிற்கு எதிரான தகவல்களை கூட்டமைப்பு, ஐ.நா.விற்கு வழங்கியிருக்குமாயின் அக்கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும். அது மட்டுமின்றி அனைத்து உறுப்பினர்களையும் விசாரணை செய்து தண்டனை வழங்கவேண்டும் என்றும் கூறினார். ஏனென்றால் நாட்டிற்கு எதிராக செயற்படுபவர்களை பதவி, தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதே முறையாகும் எனக் குறிப்பிட்ட குணதாஸ அமரசேகர, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கோ தமிழ் மக்களுக்கோ நன்மை செய்தது கிடையாது எனவும், பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு அழிவுகளையும் பின்னடைவுகளையுமே தமிழர்களுக்கு கொடுத்துள்ளதாகவும் கூறினார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்நாட்டில் இருந்து கொண்டு சர்வதேசத்தில் இடம்பெறும் நாட்டிற்கு எதிரான சதிகளுக்கு துணை போகின்றனர் என்றும் குற்றம் அவர் சுமத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG