அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 8 அக்டோபர், 2011

நோபல் சமாதான பரிசு 3 பெண்களுக்கு பகிர்ந்தளிப்பு

2011 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு மூன்று பெண்களுக்கு கூட்டாக வழங்கப்படவுள்ளது. லைபீரிய ஜனாதிபதி எலன் ஜோன்ஸன் சேர்லீப், அவரின் சக நாட்டவரான லேமா ஜிபோவீ, யேமன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர் தவாக்குள் கர்மன் ஆகியோரே நோபல் சமாதான பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
'சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அபிவிருத்திகளில் செல்வாக்குச் செலுத்துவதற்கு ஆண்களைப் போன்று பெண்களும் சமமான வாய்ப்புகளை பெறாவிட்டால் ஜனநாயகத்தையும் நிரந்தர சமாதானத்தையும் நாம் அடைய முடியாது' என நோர்வேயைச் சேர்ந்த நோபல் சமாதான குழு தெரிவித்துள்ளது. 'பெண்களின் பாதுகாப்புக்காகவும் சமாதானத்தை கட்டியெழுப்பும் பணியில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்காகவும் வன்முறையற்ற போராட்டம் நடத்தியமைக்காக இம்மூன்று பெண்களையும் கௌரவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக நோபல் சமாதான பரிசுக் குழு தெரிவித்துள்ளது. கடந்த 7 வருடகாலத்தில் நோபல் சமாதான பரிசு பெண்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG