அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2011

வயிற்றினுள் போதைப்பொருள் அடங்கிய பை வெடித்ததனால் உயிரிழந்த பெண்மணி: நியூசிலாந்தில் சம்பவம்

நியூசிலாந்து நாட்டிற்கு கொக்கெய்ன் போதைப்பொருளை சிறிய பைகளில் அடைத்து தனது வயிற்றினுள் வைத்து கடத்தி வந்த பெண்மணியொருவர் வயிற்றினுள் அப்பைகளில் ஒன்று வெடித்ததனால் உயிரிழந்துள்ளார்.
சோர்லிண்டா ஆரிட்சபால் வெகா என்ற அப்பெண்மணி கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவராவார். இவர் ஆர்ஜன்டீனாவின் புவனஸ் அயர்ஸிலிருந்து தனது குடும்பத்தாருடன் நியூசிலாந்து ஓக்லன்ட் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அடுத்த நாள் காலை இவர் அங்குள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் இவரது உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியபோது இவர் தனது வயிற்றினுள் போதைப்பொருள் அடைக்கப்பட்ட 26 சிறிய கெப்சுல்களை விழுங்கி கடத்தி வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒன்று வயிற்றினுள்ளே வெடித்துள்ளது. இதனாலேயே இவர் உயிரிழந்துள்ளமை மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அச் சிறிய கெப்சுல் வடிவ பையொன்றின் நிறை 20 கிராம் எனவும் இவற்றின் மொத்த பெறுமதி 91,000 பவுண்ட்ஸ்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அந்நாட்டு குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். _

0 கருத்துகள்:

BATTICALOA SONG