அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2011

பாதாள உலகக் கோஷ்டி தலைவர் சுட்டுக் கொலை

கொழும்பு, ஆமர்வீதியில் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலின்போது நன்கறியப்பட்ட பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய தலைவரான 'களு துஷார' சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
குறித்த நபரிடமிருந்து ரி - 56ரக துப்பாக்கி, 90 மில்லிமீற்றர் பிஸ்ரல் என்பன மீட்கப்பட்டன. ஆமர்வீதி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை நடவடிக்கையின்போது பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்கள் தப்பிச்சென்றதாகவும் அவர்களில் ஒரு சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். மற்றைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG