அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

பனை வள ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்

கைதடியில் புனரமைக்கப்பட்டு வரும் பனை வள ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுமானப் பணிகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஏ9 பிரதான வீதியின் கைதடிப் பகுதியில் பனை வள ஆராய்ச்சி நிலையம் இயங்கி வந்த நிலையில் கடந்த கால யுத்தம் காரணமாக கட்டிடம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் அதனை மீண்டும் இயங்க வைப்பதற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது புனரமைக்கப்பட்டு வரும் இக்கட்டிடடத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டதுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் துறைசார்ந்தோரிடம் விளக்கினார். இதன்போது பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் பொதுமுகாமையாளர் லோநாதன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பெருமுயற்சியின் காரணமாக கைதடிப் பகுதியில் பனை வள ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டிடம் மீளவும் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG