அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 37 பேர் கைது

டந்த சில தினங்களில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 37 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக இத்திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மெக்ஷி புரொக்டர் கூறினார்.
கொழும்பில் மதுபோதையுடனான சாரதிகள் காரணமாக ஏற்பட்ட இரு விபத்துகள் குறித்த தகவல்களின் பின்னரே இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவின் பணிப்பின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பு வாகனபோக்குவரத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு தலா 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. அதேவேளை, பின்விளக்குகள் இல்லாத துவிச்சக்கர வண்டிகள் காரணமாகவும் விபத்துகள் அதிகரித்திருப்பதை பொலிஸ் திணைக்களம் கண்டறிந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக ஒக்டோபர் முதலாம் திகதி விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடத்த பொலிஸார் நடத்தவுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG