அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

மாணவியின் நெஞ்சை பிளேட்டினால் வெட்டிய இனந்தெரியாத நபர்கள்

பா டசாலைக்குச் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவரை இடைமறித்த இனம் தெரியாத நபர்கள் சிலர், அம்மாணவியின் நெஞ்சுப் பகுதியில் கூரிய பிளேட்டினால் கீறி காயத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவமொன்று யாழ், இருபாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 16 வயதுடைய மாணவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலைக்குச் செல்வதற்காக இருபாலை, வி.எச். வீதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மேற்படி மாணவியை வயல் வெளியொன்றுக்கு அருகில் அமைந்துள்ள பாழடைந்த வீட்டின் முன்பாக சைக்கிள்களுடன் நின்றுகொண்டிருந்துள்ள இரு இளைஞர்கள், மாணவி மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது, அவ்வழியாக மேலும் சில மாணவர்கள் வருவதை அவதானித்துள்ள சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG