அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 29 ஜூலை, 2011

ஸ்ட்ரோஸ்கானின் இரகசிய பாலியல் உறவு: அதிரடியாகக் கசிந்துள்ள மற்றுமொரு சம்பவம்

ர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ரோஸ்கான் தன்னுடன் 9 மாதங்கள் இரகசிய உறவு வைத்திருந்ததாக பெண் சட்டத்தரணியொருவர் ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.


மேரி விக்டொரைன்(38) என்ற அப்பெண் தனக்கு 23 வயதாக இருந்த வேளையில் ஸ்ட்ரோஸ் கான் தன்னுடன் உறவைப் பேணியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அசாதாரண காமப் பசி கொண்டவர் எனவும் எனினும் தன்னுடன் பலவந்தமாக உறவுகொள்ளவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக இருந்த ஸ்ட்ரோஸ்கான் பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டதுடன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பின்னர் ஸ்ட்ரோஸ் கான் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் அவர் தம்முடன் உறவைப்பேணியதாக 6 பெண்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இப்பட்டியலில் தற்போது இன்னொரு பெண்ணும் இணைந்துள்ளார்.
ஸ்ட்ரோஸ் கான் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் பின்னர் தன்னை கைவிட்டுவிட்டதால் தற்கொலை செய்யவும் முயற்சித்ததாக கூறியுள்ள அப்பெண் அண்மையில் ஊடகங்களுக்கு பரபரப்பான பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG