அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 18 மார்ச், 2011

மக்களின் அபிவிருத்தியில் மகேஸ்வரி நிதியம் போன்றவற்றின் நிதியுதவி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது - யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க

யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்களின் அபிவிருத்தியில் அதிக பங்களிப்பு செய்ய வேண்டியது தமது கடமையென்றும் இதற்கு மகேஸ்வரி நிதியம் போன்றவற்றின் நிதியுதவி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்.குடாநாட்டின் 51 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களும் மகேஸ்வரி நிதியத்தின் நிதியுதவியுடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டு வருவதனையும் மணிக்கூட்டு வீதி திறக்கப்பட்டதனை நினைவு படுத்தியதுடன் இன்று சுபாஸ் விடுதி உரிமையாளரிடம் கையளிக்க உள்ளதாகவும் இதனை தொடர்ந்து விக்டோரியா வீதியும் பயன்படுத்தும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய தினம் (17) மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகேஸ்வரி நிதியத்தின் செயல் திட்ட இணைப்பாளர் றஜீவ் சிறப்பு விருந்தினராகவும் பிரதேச செயலாளர்கள் மற்றும் நயினை நாகபூசனி அம்பாள் தேவஸ்தான குருக்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் பரிசில்கள் வழங்கியதுடன் வறுமைக் கோட்டிற்குள் கீழ்; வாழும் குடும்பங்களுக்கு தலா 10 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










0 கருத்துகள்:

BATTICALOA SONG