லி பியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கடும் யுத்தத்தில் ஈடுபட்டுவந்த கேணல் கடாபி தலைமையிலான அரசாங்கம், இன்று வெள்ளிக்கிழமை ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்த பிரகடனம் செய்துள்ளது.
லிபிய தலைவர் கேணல் கடாபியை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாபிக்கு ஆதரவான அரச படைகள் கடும் தாக்குதல்களை நடத்தி வந்தன.
இந்நிலையில் லிபிய பொதுமக்களை பாதுகாப்பதற்காக லிபியா மீதான வான் கடல் மார்க்கமான தாக்குதல்கள் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை இன்று அங்கீகாரம் வழங்கியது.
அதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் முதலான மேற்கு நாடுகள் கொண்டுவந்த இத்தீர்மானம் அங்கீகரிக்கப்பட்ட மூலம் லிபியாவில் விமான பறப்பு தடை வலயம் அமுல்படுத்தப்பட்டதுடன் லிபியா மீதான தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் தயாராகத் தொடங்கின.
அதன்பின் சில மணித்தியாலங்களில் கேணல் கடாபி ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தப் பிரகடனம் செய்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு சிலமணித்தியாலங்களுக்கு முன்னர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கடாபி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானித்தின் பின்னர் இன்று தலைநகர் திரிபோலியில் செய்தியாளர்களை சந்தித்த லிபிய வெளிவிவகார அமைச்சர் மௌஸா கௌஸா, அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு லிபியா தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை லிபியா ஏற்றுக்கொள்வதாகவும் சர்வதேச சமூகத்துடனான பேச்சுவார்த்தைக்கான அனைத்து மார்க்கங்களையும் லிபியா ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். விமானப் பறப்பு தடை வலயத்தை லிபியா மதித்து நடக்கும் என அவர் கூறினார்.
எனினும் யுத்த நிறுத்த அறிவிப்பின் பின்னரும் லிபிய படைகளின் தாக்குதல்கள் தொடர்வாதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் லிபிய அரசாங்கம் தனது தீர்மானங்களை வார்த்தைகள் மூலம் அல்லாமல் செயலில் வெளிப்படுத்த வேண்டும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
'கடாபி வெளியேறுவதற்கு அழுத்தம் கொடுக்க நாம் சர்வதேச சமூகத்திலுள்ள எமது பங்காளர்களுடன் நாம் தொடர்ந்து செயற்படுவோம். ஆத்துடன் லிபிய மக்களின் நியாயமான அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கிறோம்' என அவர் கூறினார்.
இதேவேளை, கேணல் கடாபியை அவரின் வார்த்தைகள் மூலம் அல்லாமல் அவரின் நடவடிக்கைகள் மூலமே பிரிட்டன் மதிப்பிடும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக