த ங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை அதிமுக கபளீகரம் செய்ததால், போர்க் கொடி உயர்த்திய தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லா கூட்டணிக் கட்சிகளுடனும் அதிமுக அவசரமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
இதில் இடதுசாரிகளுடன் சமரசம் ஏற்பட்டதையடுத்து முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்று பேச்சு நடத்தினர். பின்னர் மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
முன்னதாக இன்று காலை அதிமுக மற்றும் தேமுதிக, இடதுசாரி தலைவர்கள் இடையிலான சுமூகமாக நடந்து வருவதாக ஜெயா தொலைக்காட்சி மூலம் அதிமுக தகவல் தெரிவித்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைகள் எங்கு நடக்கின்றன என்பதைத் தெரிவிக்கவில்லை.
இன்று காலை தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் , பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விஜய்காந்த் தனது கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. அதே போல இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் அலுவலகங்களில் இல்லை.
இவர்களுடன் அதிமுக பிரதிநிதிகள் பாம்குரோவ் ஹோட்டலில் வைத்து ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
அப்போது தேமுதிக கேட்ட 21 தொகுதிகளைத் தருவதாக அதிமுக தரப்பில் உறுதி மொழி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தேமுதிக சமாதானமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரும் தொகுதிகளையும் அதிமுக தர முன் வந்தது.
இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மகேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் இன்று பிற்பகலில் அதிமுக தலைமைக் கழகம் வந்தனர். அவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயராமன் ஆகியோர் பேச்சு நடத்தினர். 10 நிமிடங்களே நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் குழுவினர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க போயஸ் தோட்டம் கிளம்பிச் சென்றனர்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் மகேந்திரன், அதிமுகவுடன் சுமூகமான பேச்சு நடந்து வருகிறது. இரண்டு, மூன்று நாட்களில் சிக்கல்கள் தீர்ந்து தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடும். இப்போதைய நிலையில் 3வது அணி அமைய வாய்ப்பில்லை என்றார்.
இவர்களைத் தொடர்ந்து மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் இன்று மாலை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், ரெங்கராஜன் ஆகிய இருவரும் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
அதே போல சமத்துவ மக்கள் கட்சி யின் தலைவர் சரத்குமார் , இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆகியோரும் ஜெயலலிதாவை அடுத்தடுத்து சந்தித்துப் பேசி தங்களுக்கான தொகுதிகளைப் பெற்றனர்.
இவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவை தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணித் தலைவரும் விஜய்காந்தின் மச்சானுமான சுதீஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அப்போது தாங்கள் விரும்பும் 41 தொகுதிகளின் பட்டியலை ஜெயலலிதாவிடம் அவர்கள் தந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதே போல வைகோவுக்கு 16 இடங்கள் வரை தந்து கூட்டணியில் சேர்க்கத் தயார் என்றும் அதிமுக அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரது கட்சி நிர்வாகிகளும் அதிமுகவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கவுள்ளனர்.
இதற்கு அடையாளமான ஜெயலலிதாவுக்கு எதிரான போராட்டங்களை நிறுத்துமாறு தனது கட்சியினருக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பார்வர்ட் பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டியைக் கொடுக்கவும் ஜெயலலிதா சம்மதித்து விட்டதாக அக்கட்சியே தெரிவித்து விட்டது. அதே போல புதிய தமிழகம் கட்சிக்கும் கேட்கும் தொகுதி தரப்படு்ம் என்று தெரிகிறது.
அனைத்துக் கட்சிகளுடன் பேசி முடித்த பின்னர் திருத்தப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக