அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 11 மார்ச், 2011

அமைச்சர் பசில் முல்லைத்தீவு விஜயம்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடிதாங்கிகுளம் என்னும் பகுதியிலுள்ள நீர்ப்பாசனக்குளம் புனரமைப்புத் திட்டத்தை தொடக்கி வைப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வு இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர் ரிசாட் பதியுதீன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் மீள் எழுச்சித் திட்டப் பணிப்பாளர் லியனகே ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசிய ரீதியில் 2000 சிறிய குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த நீர்ப்பாசனக்குளம் புனரமைப்புத் திட்டம் உள்ளடக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG