அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 30 மார்ச், 2011

குவைத்தில் இலங்கைப் பணிப்பெண் கடத்தப்பட்டு வல்லுறவு

குவைத்தில் பணியாற்றும் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக குவைத் சிற்றி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத் நகரில் அப்பெண் பணியாற்றும் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்தபோது அங்கு காத்திருந்த இனந்தெரியாத நபர்கள் மூவர் அவரை பின்தொடர்ந்து சென்று, அப்பெண்னை இழுத்து காரொன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
28 வயதான இப்பெண் இது தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார். தன்னை எஜமானரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீடொன்றுக்கு கொண்டு சென்று மேற்படி மூவரும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி மூவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர் என் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG