அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 30 மார்ச், 2011

அண்ணே, என் பேரு பாண்டி இல்லை'!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!!

ழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த். இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார்.

இந் நிலையில் நேற்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கட்சி வேட்பாளரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அடித்து, அறைந்த விஜய்காந்த், அவரை 'கும் கும்' என்று குத்தினார்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர், அண்ணே என் பேரு பாண்டியன் இல்லைன்னே.. பாஸ்கர் என்று திருத்தினார்.
இதை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்கும்படி மைக்கில் சத்தமாகவே பாஸ்கர் சொல்லிவிட, உடனே நிதானம் இழந்தார் விஜய்காந்த்.
ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். அவை வேனுக்குள் தள்ளி முகத்திலும் முதுகிலும் குத்து குத்து என்று குத்தியதோடு, சரமாரியாக அறைந்தார்.
இதையடுத்து அந்த வேட்பாளர் வேனுக்குள்ளேயே பம்மியபடி, கைகளால் விஜய்காந்தின் அடிகளை தடுத்தார். ஆனாலும் விஜய்காந்த் முகத்தைத் தேடித் தேடி அவரைக் குத்திவிட்டு, அந்த இடத்தைக் காலி செய்தார்.
விஜயகாந்த்தின் இந்த கேவலமான செயல் அப் பகுதியில் நின்றிருந்த மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG