அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 20 மார்ச், 2011

லிபியா மீது பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கப் படைகள் தாக்குதல் _

லிபிய வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கான தடைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கிய பிறகு முதல் முறையாக நேற்று மாலை பிரான்ஸ் விமானங்கள் லிபியாவில் தாக்குதல் நடத்தியுள்ளன. பாரிஸில் உள்ள பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சு இதை உறுதி செய்துள்ளது.

லிபிய இராணுவ வாகனங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 20 பிரான்ஸ் நாட்டு விமானங்கள் ஈடுபட்டதாக அதன் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பென்காசி நகரில் இருக்கும் பொது மக்களை பாதுகாக்கவும், கிளர்ச்சியாளர்கள் மீது கேணல் கடாபி தாக்குதல்கள் நடத்துவதை தடுக்கவும் பிரான்ஸ் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிக்கலா சர்கோசி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் லிபியா மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது விமானங்கள் லிபியா மீது தாக்குதல் மேற்கொண்டு வருவதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் விமானங்கள் நேற்று மேற்கொண்டுள்ள விமானத் தாக்குதலினால் லிபியாவின் பல வாகனங்கள் சேதடைந்துள்ளன.
இந்த நிலையில் லிபியா மீது அமெரிக்க எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்தேய விமானங்கள் லிபியாவின் தலைநகரான திரிபோலியின் இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருவதாக ஏ.எவ்.பி. செய்தி முகவர் நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் லிபிய பாதுகாப்பு இலக்குகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 'தவிர்க்க முடியாத சட்டம் மற்றும் உரிமைகள்" தொடர்பாக லிபியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். 

0 கருத்துகள்:

BATTICALOA SONG