அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 20 மார்ச், 2011

வைகோவின் விலகல் முடிவு மன வேதனை தருகிறது-ஜெ.

ட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற மதிமுகவின் முடிவும், வைகோவின் அறிவிப்பும் எனக்கு பெரும் மன வேதனை தருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுகவின் அலட்சியப் போக்கு மற்றும் இழுபறி காரணமாக அதிர்ச்சி அடைந்த மதிமுக, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்து அறிவித்துள்ளது.
இதையடுத்து இன்று ஜெயலலிதா, வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அதிமுக தலைமையிலான கூட்டணியில் 2006ம் ஆண்டு முதலே அங்கம் வகித்து வருகிறது மதிமுக. நடைபெறவுள்ள 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதை முதிர்ந்த அரசியல்வாதியான தாங்கள் நன்கு அறிவீர்கள்.
வருகிற தேர்தலில் தாங்கள் கேட்டுக் கொண்டபடி, 21 தொகுதிகளை ஒதுக்க முடியாது என்ற சூழல் உள்ளது. எனவே 12 தொகுதிகளை ஒதுக்குவதாக கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் மூலம் தகவல் சொல்லி அனுப்பியிருந்தேன்.
அவர்களும் தங்களை நேரில் சந்தித்து இதைத் தெரிவித்தார்கள். இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.

மதிமுகவின் நிலைப்பாட்டை எடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது.

எப்படி இருந்தாலும், உங்கள் அன்புச் சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

0 கருத்துகள்:

BATTICALOA SONG