உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகளை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு தமிழர் பிரச்சினை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.
தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்ததே, பல பிரச்சினைகளுக்கும் காரணம். இப்போது போர் முடிந்துவிட்ட சூழ்நிலையில், அங்கு தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையும் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். இதற்காக அந்நாட்டு ஜனாதிபதியுடன் பல முறை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி பேசி வருகிறது என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக