அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 21 பிப்ரவரி, 2011

கிளிநொச்சி விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்

ல்வேறு மக்கள் பணிகளையும் மேம்பாட்டு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்து முகமாக இன்றையதினம் கிளிநொச்சிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நகரில் பொதுமக்களுடனும் கலந்துரையாடி அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கிளிநொச்சி ஏ9 வீதியில் தமது பல்வேறு தேவைகளின் நிமித்தம் வருகை தந்து நின்றிருந்த பொதுமக்கள் திடீரென தம்முன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வருகை தந்ததை அடுத்து இன்ப அதிர்ச்சி அடைந்ததுடன் அவருடன் மகிழ்ச்சியுடன் அளவளாவினார்கள். மேலும் தமது பிரதேசத்தில் அமைச்சரவர்களை தங்கியிருந்து தமது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

அம்மக்கள் மத்தியில் கலந்துரையாடிய அமைச்சரவர்கள் அதீத வேலைப்பளு காரணமாக இவ்வளவு காலமும் தன்னால் கிளிநொச்சி மாவட்டத்தில் முழுக்கவனமும் செலுத்த முடியாமற் போயிருந்தபோதிலும் தனது சார்பில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் (அசோக்) அவர்குள் மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் எனத்தெரிவித்தார். ஆயினும் எதிர்காலத்தில் உரிய நாட்களை ஒதுக்கி கிளிநொச்சி மக்களின் தேவைகளில் தான் நிச்சயம் பங்கெடுப்பேன் எனவும் மக்களுக்கு உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.







0 கருத்துகள்:

BATTICALOA SONG