அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

மனோ கணேசன், சதாசிவம் தலைமையில் 'மலையக தமிழ் கூட்டமைப்பு'

நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து பிரதேச சபைகளிலும்இ இரண்டு நகரசபைகளிலும் போட்டியிடும் முகமாக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும், எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணியும் இணைந்து மலையக தமிழ் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

அம்பகமுவ பிரதேச சபை, ஹங்குரன்கெத்த பிரதேச சபை, ஹட்டன்-டிக்கோய நகரசபை, தலவாக்கலை, லிந்துல்லை நகரசபை ஆகியவற்றில் ஏணி சின்னத்திலும், நுவரெலியா பிரதேச சபை, கொத்மலை பிரதேச சபை, வலப்பனை பிரதேசசபை ஆகியவற்றில் மீன் சின்னத்திலும் இந்த மலையக தமிழ் கூட்டமைப்பு போட்டியிடுமென இக்கூட்டமைப்பின் தலைவர்களான மனோ கணேசனும், எஸ்.சதாசிவமும் நுவரெலியாவிலிருந்து தெரிவித்துள்ளனர்.
நேற்றும், இன்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஜனநாயக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனும், இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளர் எஸ்.சதாசிவமும் கையளித்தனர்.
இந்த கூட்டமைபில் நவ சம சமாஜய கட்சி சார்பாக ஒரு வேட்பாளரும் அம்பகமுவ பிரதேச சபைக்காக போட்டியிடுகின்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG