அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

ரயில் டிக்கெட் கிடைக்காததால் அரைநிர்வாண ஆர்ப்பாட்டம்

மோசமான ரயில் சேவையால் கோபமுற்ற பயணியொருவர் உள்ளாடையை மட்டும் அணிந்த வண்ணம் ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக தனிநபர் போராட்டமொன்றை நடத்திய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது
.ஸியாவோ வெங் எனும் 32 வயதான நபர், ஸிஜேயிங் மாகாணத்தின் ஜின்ஹுவா நகர ரயில் நிலையத்தில் 14 மணித்தியாலங்கள் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காமல் பொறுமையிழந்ததால் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
சீனப் புதுவருட கொண்டாட்டத்தை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சீனாவின் ஹெனான் மாகாணத்தின் செங்கியூ நகருக்குச் செல்வதற்காக அவர் ரயில் நிலையத்திற்குச் சென்றார. எனினும் 14 மணித்தியாலங்கள் காத்திருந்தபின் அவருக்கு டிக்கெட் முடிந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கோபம்கொண்ட ஸியாவோ ரயில் நிலைய தலைமயதிகாரியின் அறைக்குச் சென்று தனது ஆடைகளை களைந்து எதிர்ப்பை வெளியிட்டாராம்.
' நீண்ட வரிசையில் காத்திருந்தபின் என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. அதனால் நான் ரயில் நிலைய தலைமையதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்று இந்த ரயில் நிலையம் குறித்த நான் என்ன நினைக்கிறேன் என்பதை அவருக்கு தெரிவித்தேன்' என்று அவர் விபரித்துள்ளார்.
ஆனால் அவர் நிர்வாணமாக வந்தாலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என ரயில் நிலையத்தின் பணிப்பாளர் செங் வென்க்ஸியன் தெரிவித்துள்ளார்.
' நான் அவரை பார்த்து திகைப்படைந்தேன். அவர் உள்ளாடை மட்டும் அணிந்த வண்ணம் வேகமாக ஓடிவந்து ரயில் டிக்கெட் தருமாறு கேட்டார்' என்று வென்க்ஸியன் தெரிவித்துள்ளார்.
இந்த பாதையில் முதல் ரயில் நிலையம் ஜின்ஹுவா அல்ல. மற்றும் சாங்கியூ நகருக்கான 100 டிக்கட்கள் மாத்திரமே தினமும் விநியோகத்திற்காக எமக்கு கிடைககும். அதனால் அவருக்கு டிக்கெட் பெற முடியாமல் போனமை சாதாரணமானதுதான் என அவர் கூறியுள்ளார்.
இறுதியில் ஆடை அணிந்து கொள்ளாவிட்டால், பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டமைக்காக கைது செய்யப்பட வேண்டியிருக்கும் என பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டதையடுத்தே ஸியாவோ தனது போராட்டத்தை கைவிட்டாராம்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG