அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 28 ஜனவரி, 2011

அதிகமான உள்ளூராட்சி சபைகளில் ஐ.தே.க.வின் புதிய நிர்வாகம் அமையும்: கருஜயசூரிய _

ரசாங்கத்துக்கு சாதகமாக அமைந்துள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கம் பாதகமான பிரதேசங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்துள்ளது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி எது எவ்வாறிருப்பினும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி புதிய நிர்வாகம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல்களின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆனாலும் அரசாங்கத்திற்கு நல்ல செய்தியை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அதிகரிப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பிரதித் தலைவர் கருஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்:

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. எமது வேட்பாளர்களில் திறமைமிக்கவர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகியவர்கள் என அடங்குகின்றனர். தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்கும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும் முனைப்புக் காட்டி வருவதை காணமுடிகிறது.
ஏனெனில் இந்நாட்டில் தற்போது மக்கள் மீது அதிகமான சுமை ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வதற்கு திண்டாடுகின்றனர். நல்லாட்சியோ ஜனநாயகமோ தனிமனித சுதந்திரமோ அற்றுப் போய்விட்டது. கடத்தல், காணாமல் போதல், கொலை கொள்ளை போன்ற கலாசாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் நல்லாட்சிக்கான வழிவகைகளைச் செய்து மக்களை வாழவைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கான பயணத்தில் அனைத்துத் தரப்பினரும் அணி திரளுமாறு கேட்கின்றோம்.
நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆனாலும் அரசாங்கத்திற்கு இடித்துரைக்கும் வகையில் பாடம் புகட்டமுடியும். மேலும் இந்தத் தேர்தல் மிகவும் அவசியமானது என்பதால் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டிருப்போர் மற்றும் தேர்தல்களில் இருந்து விலகியிருப்போர் என சகலரும் இந்த தேர்தலை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி சில பகுதிகளில் தேர்தல்களை ஒத்திவைத்துள்ள அரசாங்கம் தனக்கு சாதகமான பகுதிகளில் தேர்தல்களை நடத்துகின்றது. எப்படி இருப்பினும் நாம் எதற்கும் முகம் கொடுப்பதற்கு துணிந்துள்ளோம்.
இதற்கு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது வரையிலும் தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புரைகள் அனைத்தும் ஏட்டளவிலேயே காணப்பட்டன. அது அமுல்படுத்தப்படவோ அல்லது பின்பற்றப்படவோ இல்லை. சகல வழிகளிலும் தேர்தல் முறைகள் இடம்பெற்றன.
எனவே நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நீதியானதும் சுதந்திரமானதுமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG