அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளர் கதரின் பிராக், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
வெள்ளத்தினால் 43 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளநீர் வற்றிச் செல்கின்ற நிலையில் அரசாங்கத்தின் நலன்புரி நிலையங்களில்; 10,000க்கும் குறைவான பொதுமக்கள்; தங்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கதரின் பிராக் திரும்பிச்செல்லவுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 19 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக