அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 19 ஜனவரி, 2011

மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம்-தியோரா மாற்றம்-திமுகவுக்கு வாய்ப்பு மறுப்பு

த்திய அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திமுகவுக்கு இதில் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா மாற்றப்பட்டுள்ளார். பல்வேறு அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.
இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவை மாற்ற விவரம்:

கேபினட் அமைச்சர்கள்:

1. பிரபுல் படேல் - கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்.
2. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி
3. சல்மான் குர்ஷித் - நீர் வளம் மற்றும் கூடுதல் பொறுப்பாக சிறுபான்மையினர் நலம்.

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு):

1. அஜய் மேக்கான் - இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு.
2. பேனி பிரசாத் வர்மா - இரும்பு.
3. கே.வி.தாமஸ் -நுகர்வோர் நலம், உணவு, பொது விநியோகம்.

இணை அமைச்சர்கள்:

1.அஸ்வனி குமார் - திட்டம் , நாடாளுமன்ற விவகாரம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல்.

2. கே.சி.வேணுகோபால் - மின்சாரம்.

இலாகா மாற்றம்:

கேபினட் அமைச்சர்கள்:

1. சரத் பவார் - விவசாயம், உணவுப் பதப்படுத்துதல் துறை.
2. வீரபத்திர சிங் - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்.
3. விலாஸ் ராவ் தேஷ்முக் - ஊரக வளர்ச்சி. பஞ்சாயத்து ராஜ் (கூடுதல்)
4. ஜெய்பால் ரெட்டி - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு.
5. கமல்நாத் - நகர்ப்புற வளர்ச்சித்துறை.
6. வயலார் ரவி- வெளிநாடு வாழ் இந்தியர் நலம். சிவில் விமானப் போக்குவரத்து (கூடுதல்)
7. முரளி தியோரா - கம்பெனி விவகாரம்.
8. கபில் சிபல் - மனித வளத்துறை. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு (கூடுதல்)
9. பி.கே.ஹண்டிக் - வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி.
10. சி.பி. ஜோஷி - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை.
11. குமாரி ஷெல்ஜா - வீ்ட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் கலாச்சாரம் (கூடுதல்)
12. சுபோத் காந்த் சஹாய் - சுற்றுலா.
13. எம்.எஸ். கில் - புள்ளியியல், திட்ட அமலாக்கம்.
14. பவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம். அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் (கூடுதல்).

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு):

1. தின்ஷா படேல் - சுரங்கம்.

இணை அமைச்சர்கள்:

1. இ. அகமது - வெளியுறவு.
2. ஹரீஷ் ராவத்- விவசாயம், உணவுப் பதப்படுத்துதல் துறை.
3. வி.நாராயணசாமி - நாடாளுமன்ற விவகாரம், பெர்சனல், பொதுக் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், பிரதமர் அலுவலகம்.
4. குருதாஸ் காமத் - உள்துறை.
5. சாய் பிரதாப் -கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள்.
6. பரத் சிங் சோலங்கி - ரயில்வே
7. ஜிதீன் பிரசாதா - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை.
8. மாதவ் கந்தேலா - பழங்குடியினர் நலத்துறை.
9. ஆர்.பி.என்.சிங் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் கம்பெனி விவகாரம்.
10. துஷார்பாய் செளத்ரி - சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை.
11. அருண் யாதவ் - விவசாயம், உணவுப் பதப்படுத்துதல் துறை.
12. பிரதிக் பிரகாஷ்பாபு பாட்டீல் - நிலக்கரி.
13. வின்சென்ட் பலா - நீர் வளம், சிறுபான்மையினர் நலம்.

திமுகவுக்கு இடமில்லை

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் திமுக, திரினமூல் காங்கிரஸ் ஆகியவை இடம் பெறவில்லை. இதன் மூலம் டி.ஆர்.பாலுவுக்குப் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது.
Read: In English
தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் இந்தக் கட்சிகள் பெறும் நிலையைப் பொறுத்து அவர்களுக்கு அமைச்சர் பதவியை அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

திரினமூல் காங்கிரஸ் கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியைக் கேட்டிருந்தது. திமுகவோ, ராசா விலகியதால் ஏற்பட்ட காலியிடத்திற்கு தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராகக் கோரியிருந்தது. குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG