அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 11 செப்டம்பர், 2010

"தில்ஷான் பற்றிய செய்திகள் தவறு"

லங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்ண தில்ஷானைத் தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேட்ச் ஃபிக்ஸிங் அதாவது ஆட்ட முடிவு முன்நிர்ணய ஊழல் தொடர்பில் இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று கூறி இலங்கையின் கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்ற வருடம் லண்டனின் இரவு விடுதி ஒன்றில் சட்டவிரோத பந்தயத் தரகர்களோடு இருந்ததாகத் தெரிவிக்கப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி.யின் ஊழல் ஒழிப்புப் பிரிவினரிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது திலகரத்ன தில்ஷானின் பெயரே என லண்டனின் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
தில்ஷான் பந்தயத் தரகர்களைச் சந்தித்ததாக அணியின் சக வீரர்களிடம் நிலவும் சந்தேகம் பற்றி அணித் தலைவர் சங்ககாரா இலங்கைக் கிரிக்கெட் வாரியத்திடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் இந்த அறிக்கையை ஐ.சி.சி.யிடம் சமர்ப்பித்திருந்ததாக டெய்லி மெயில் செய்தி கூறுகிறது.
ஆனால் தில்ஷான் பற்றி அணி வீரர்கள் குமார சங்ககாரவிடம் புகார் கூறவில்லை என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தவிர சங்ககாரவோ கிரிக்கெட் அணி நிர்வாகத்தினரோ ஐ.சி.சியின் ஊழல் ஒழிப்பு பிரிவினரிடமோ இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடமோ எந்த ஒரு வீரர் மீதும் எவ்வித புகாரையும் தெரிவித்திருக்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG