அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 11 செப்டம்பர், 2010

பாக். தீவிரவாதிகள் இலங்கையில் பயிற்சி பெறவில்லை : கோட்டாபய

பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத குழுவும் இலங்கையில் பயிற்சி பெறவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்
.லக்ஷர் ஈ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர் ஒருவர் தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும் முகமாகவே பாதுகாப்பு செயலாளர் இணையத்தளத்திடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் எந்தவொரு தீவிரவாதக் குழுவும் செயற்படவில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.
இதேவேளை, லக்ஷர் ஈ தொய்பா எனும் அமைப்பின் அங்கத்தவரது தகவல் குறித்து வெளிவிவகார அமைச்சு இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இது தொடர்பாக புதுடில்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு விவகார அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் ஏற்கெனவே இது குறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளதாகவும் இது தொடர்பான விபரமான அறிக்கையொன்றை இலங்கை வெளிவிகார அமைசசு கோரியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG