அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

"புனர்வாழ்வு நிலையத்தில் கே.பி. இருக்கிறாரா? " -நாடாளுமன்றத்தில் கேள்வி

மிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்காக அரசாங்கத்தினால் நடத்தப்படும் புனர்வாழ்வு நிலையங்களில் குமரன் பத்மநாதன் இருக்கிறாரா என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவிடம் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகர, அரசாங்கத்தினால் நடத்தப்படும் பல்வேறு புனர்வாழ்வு நிலையங்களில் புலிகள் இயக்கச் சந்தேக நபர்கள் 8780 பேர் உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குமரன் பத்மநாதனும் அவர்களில் ஒருவரான எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் டியூ குணசேகர "பத்மநாதன் என்ற பெயருடையவர்கள் பலர் இருக்கலாம். குமரன் பத்மநாதன் என்று இருப்பதாக தெரியவில்லை. அது தொடர்பாக கேள்வி எழுப்பினால் ஆராய்ந்து பார்த்து பதில் கூற முடியும்" என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG