அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

ஆடம்பர வாழ்க்கை கிடைக்காததால் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்பி வந்த யுவதி

பா பாதுகாப்பு ஊழியராக பணியாற்றிய இளைஞர் ஒருவருடன் காதல் கொண்டு வீட்டைவிட்டுச் சென்ற செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த யுவதியொருவர் பின்னர் தனது காதலரால் தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையை தொடர உதவ முடியாது என உணர்ந்த பின்னர், மீண்டும் பெற்றோரின் வீட்டிற்கு திரும்பி வந்த சம்பவம் கொழும்பு கொஹுவலவில் இடம்பெற்றுள்ளது.

பெருந்தோட்டமொன்றுக்குச் சொந்தமான கோடீஸ்வரர் ஒருவரின் மகளான 19 வயதான இந்த யுவதி, தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவருடன் காதல் கொண்டார். ஜூன் 13ஆம் திகதி மேற்படி யுவதி குறித்த இளைஞடன் வீட்டைவிட்டுச் சென்று திருமணம் முடித்து தெனியாயவிலுள்ள இளைஞனின் வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.
எனினும் சிறிது காலத்திற்குள், தனது பெற்றோருடன் தான் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையை தனது கணவரால் வழங்க முடியாது என்பதை அந்த யுவதி உணர்ந்தார்.
இதேவேளை, யுவதியின் பெற்றோர் இளைஞனுக்கு எதிராக பொலிஸில் புகார் செய்திருந்தனர். இரு தரப்பினரும் தெனியாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் அழைத்து விசாரிக்கப்பட்டபோது தனது கணவரைப் பிரிந்து பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதற்கு விரும்புவதாக யுவதி தெரிவித்தார்.
இந்த யுவதி தனது ஆடைகளுக்காக மாதாந்தம் 35,000 ரூபாவை செலவிட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தன்னைவிட்டு பிரிந்து செல்ல வேண்டாம் என தனது மனைவியிடம் இளைஞன் கெஞ்சியதுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அச்சுறுத்திய போதிலும் அப்பெண் தனது பெற்றோரின் ஆடம்பர வாகனத்தில் ஏறி, அங்கிருந்து வெளியேறிவிட்டாராம்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG