அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

கொலை முயற்சியிலிருந்து ஈரானிய ஜனாதிபதி தப்பினார்

ஈரானிய ஜனாதிபதி அஹ்மடிநெஜாத் கொலை முயற்சியொன்றிலிருந்து தப்பியுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் சற்று முன் செய்தி வெளியிட்டன.

ஈரானின் மேற்குப்பிராந்திய நகரான ஹம்டானில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி அஹ்மடிநெஜாத் கலந்துகொள்ளச் சென்றபோது அவரின் வாகனத் தொடரணி மீது குண்டொன்று எறியப்பட்டதாக துபாயைத் தளமாகக் கொண்ட "அல் அரேபியா" தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அவர் காயம் எதுவுமின்றி தப்பியதுடன் திட்டமிட்டபடி கால்பந்தாட்ட அரங்கொன்றில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஈரானிய அரச தொலைக்காட்சியான பிரஸ் ரி.வி. இத்தாக்குதல் செய்தியை நிராகரித்துள்ளது.
ஆனால் ஜனாதிபதியின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை ஏற்றிச்சென்ற கார் ஒன்று தாக்குதலுக்குள்ளானதாகவும் இத்தாக்குதலில் சிலர் காயமடைந்ததாகவும் அல் அரேபியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG