அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

வெளிநாட்டு நாணயத்தாள்கள் விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

விமான இருக்கையில் மறைத்துவைத்து வெளிநாட்டுக்குக் கடத்தப்படவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான வெளிநாட்டு நாணயத் தாள்களை இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.


இலங்கையிலிருந்து துபாய் செல்லவிருந்த விமானத்தின் இருக்கையொன்றின் கீழிருந்து கைப்பற்றப்பட்ட இந்த வெளிநாட்டு நாணயங்களின் இலங்கைப் பெறுமதி 12 கோடியே 15 லட்சத்துக்கும் அதிகமானதென அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையில் விமானமொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட அதிகூடிய நாணயத் தொகை இதுவெனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாணயத் தாள்கள் 10 வெவ்வேறு பொதிகளில் காபன் கடதாசிகளில் சுற்றப்பட்டுப் பொதிசெய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG