அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

இராஜினாமாச் செய்யும்படி கோரப்பட்டதால் 8 பேரை சுட்டுக்கொன்ற ஊழியர்

வேலையிலிருந்து இராஜினாமாச் செய்யும்படி கோரப்பட்டதால் ஆத்திரமுற்ற நபர் ஒருவர் 8 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்காவில் செவ்வாயன்று இடம்பெற்றுள்ளது.



கனெக்டிகட் மாநிலத்திலுள்ள பியர் விநியோக நிறுவனமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 34 வயதான ஒமர் தோர்ன்டன் என்பவர் அந்நிறுவனத்தில் பல வருடங்கள் சாரதியாக பணியாற்றிய வந்தார். அண்மையில் ஒழுக்காற்று நடவடிக்கையொன்றை எதிர்கொண்ட அவர் பணியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டிருந்தாராம்.
தொழிற்சங்கத்தினர் அவரை நிறுவன அதிகாரிகளுடன் பேசுவதற்காக நேற்று அழைத்துவந்தபோது அவர் திடீரென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். தோரன்டனின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர்.
ஸ்தலத்திற்கு பொலிஸார் விரைந்து துப்பாக்கியை கீழே போடுமாறு தோர்ன்டனை பணித்தனர். ஆனால் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு இறந்தார்.
அவர் தற்கொலை செய்துகொள்ளும் முன் தனது தாயை தொலைபேசி மூலம் அழைத்து ,பிரியாவிடை கூறியதாக தோர்ன்டனின் காதலியின் தாயார் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG