அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

திருமணத்தின் பின் வெளிநாடு செல்ல பணம் தேவையெனக் கூறி மோசடி செய்த சந்தேக நபர் கைது

திருமணத்தின் பின்னர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதற்கு விசா பெற்றுக்கொள்வதற்கான செலவீனங்களுக்காக ஒரு மில்லியன் ரூபா பணம் தேவைப்படுவதாகக் கூறி தான் திருமணம் முடிக்கவிருந்த ஆசிரியைஒருவரிடமிருந்து பண மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மாறவிலப் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் பத்திரிகையொன்றில் வெளிவந்த திருமண விளம்பரத்திற்கு பதிலளித்த சந்தேக நபர் குறித்த ஆசிரியை மீது அக்கறை காட்டினார். இந்நிலையிலேயே, திருமணத்தின் பின்னர் வெளிநாடு செல்வதற்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி குறித்த ஆசிரியையை சந்தேக நபர் நம்பச் செய்துள்ளார்.
இந்நிலையில், வங்கியில் வைத்து சந்தேக நபருக்கு குறித்த ஆசிரியை பணம் கையளித்திருந்த நிலையில் அந்த பணப் பரிமாற்றம் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமெராக்களில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் இன்னும் 6 இலட்சம் ரூபா பணம் மற்றும் குறித்த ஆசிரியையது காரையும் தருமாறு கேட்டிருந்தார். இந்நிலையில் கார் மீண்டும் திருப்பி வழங்கப்படாதை அடுத்து சந்தேகம் கொண்ட ஆசிரியர், இது தொடர்பில் வெளிநாட்டிலுள்ள தனது சகோதரருக்கு அறிவித்துள்ளார்.
இதனைக் கேள்விப்பட்ட குறித்த ஆசிரியையின் சகோதரர் இலங்கைக்கு திரும்பி வந்திருந்த நிலையில், சந்தேக நபரது ஊழல் விடயங்கள் தொடர்பில் கண்டுபிடித்திருந்ததுடன், ஊழல் விசாரணைக் குழுவிடமும் அறிவித்தார்.
இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தனது தொழில் எனவும் தன்னை கைது செய்த அதிகாரிகளிடம் சந்தேக நபர் தெரிவித்தார்.
பொலிஸார் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG