ஹட்டனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் இருவர் கம்பளையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்கள் என்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமானது காதலர்களால் சோடிக்கப்பட்டதென்று பொலிஸார் மேற் கொண்ட விசாரணையைத் தொடர்ந்து தெரிய வந்துள்ளது.
பொலிஸாருக்குப் பிழையான தகவல்களை வழங்கிய மாணவிகள் இருவரும் உரிய விசாரணைக்குப்பிறகு அட்டன் நிதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து 10 ஆயிரம் ரூபா சரீர பிணையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவர்களை மீண்டும் புதன்கிழமை அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு அட்டன் நீதிவான் உத்திரவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த மாணவிகளின் காதலர்களான பாடசாலை மாணவன் உட்பட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த காதலர்களைக் கம்பளைக்கு அழைத்துச்சென்ற வேன்சாரதியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு குறிப்பிட்ட வேனையும் அட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அட்டன் நகரில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் தரம் 10 கல்விக்கற்கின்ற மாணவிகள் இருவர் பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவனையும் இளைஞன் ஒருவனையும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் கடந்த 2 ஆம் திகதி இவர்கள் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு கம்பளைக்குச்சென்றுள்ளனர்.
அங்கு காதலர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் இரவாகி விட்டதால் காதலர்களின் ஆலோசனைக்கேற்ப அந்த இரண்டு மாணவிகளும் பிளேட் ஒன்றினால் தத்தமது கைகளைக்கீறிக்கொண்டுள்ளனர்.
தம்மை இனந்தெரியாதவர்கள் கடத்தி வந்ததாகவும் தாம் தப்பித்து வந்ததாகவும் பிரதேச வாசிகளிடம் பொய் சொல்லியுள்ளார்கள்.
இதனைத்தொடர்ந்து இவர்களின் பேச்சினை நம்பிய பிரதேச வாசிகள் பொலிஸ் அவரபிரிவுக்கு அறிவித்துள்ளனர். இதன் பின்பு சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த கம்பளை பொலிஸார் பாடசாலை மாணவிகளை கம்பளை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு விசாரணைகளிலும் ஈடுபட்டனர். இந்த விசாரணைகளைத்தொடர்ந்தே காதலர்களின் கடத்தல் நாடகம் அம்பலத்துக்கு வந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக