லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லருக்கு எதிராக நடந்துவரும் போர் குற்ற விசாரணையில், உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மாடல் அழகி நவோமி கேம்ப்பெல் தோன்றி, 1997ல் சார்ல்ஸ் டெய்லரும் கலந்துகொண்டிருந்த ஒரு விருந்தின்போது பார்க்க அழுக்காகத் தெரியும் சில கற்கள் அடங்கிய சுருக்குப் பை தனக்கு பரிசாக வழங்கப்பட்டிருந்தன என்று வாக்குமூலம் அளித்துள்ளார்
அடுத்த நாள் காலை பையைத் திறந்து பார்த்த போது, உடனிருந்தவர்கள் அந்தக் கற்கள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் என்றும் அவற்றை லைபீரிய அதிபர் டெய்லர் அனுப்பியிருக்கலாம் என்றும் கூறினர். அதையே தானும் அப்படியே ஊகித்ததாக அவர் கூறினார். ஆனால், அவை சார்ல்ஸ் டெய்லர் அனுப்பபியது தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சியரா லியோனில் உள்நாட்டு யுத்தம் நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து இரத்தக் கரை படிந்த வைரங்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஆயுதங்களை வழங்கி சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சார்ல்ஸ் டெய்லர் மறுக்கிறார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக