பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை தீவிரப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து பயங்கரவாதம் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுக்க பாகிஸ்தான் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் இந்தியாவில் கேமரூன் கூறியிருந்தமை பாகிஸ்தானில் ஆத்திரத்தை உருவாக்கியிருந்தது.
ஆனால் இந்த இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்றுள்ள சந்திப்புக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இரு தரப்புக்கும் இடையேயான உறவுகள் சுமூகமாக இருப்பது போலவே தென்பட்டது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் செய்து வரும் பணி குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் முரண்டபட்டக் கருத்தை வெளியிட்டதன் காரணமாக பாகிஸ்தானுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான உறவு கடந்த ஒரு வாரமாக நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தது.
ஆனால் லண்டனுக்கு வெளியேயுள்ள பிரிட்டிஷ் பிரதமரின் கிராம ஒய்விடமான செக்கர்ஸ் இல் நடந்த சந்திப்புக்குப் பின்னர், சிரித்த படி செய்தியாளர்களை சந்தித்த இரு தலைவர்களும் நிதானமாக கை குலிக்கிக் கொண்டனர். கடந்த சில நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களில் இருந்து தாம் கடந்து வந்து விட்டதாக கூறிய பிரதமர் கேமரூன் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு உடைக்க முடியாத ஒன்று என்று கூறினார்.
'உறவுகள் வலுப்பெறும்'- கமரூன்
பிரி்ட்டன்-பாக். தலைவர்கள் பேச்சு
இரு நாடுகளுக்கும் இடையேயான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் குறித்தும் அதை எப்படி மேலும் விரிவடையச் செய்து இரு தரப்பு உறவை மேம்படுத்துவது என்பது குறித்தும் மிகவும் அத்தியாவசிய விடயமான பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை பற்றியும் நாம் தாம் பேசியதாக பிரிட்டிஷ் பிரதமர் கூறினார்.
ஐக்கிய இராச்சியத்துக்குள் வருவதற்கு முன்னதாக நிருபர்களிடம் பேசிய ஆசிப் அலி சர்தாரி, ஆப்கானில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நேசப படைகளுக்கு உதவியாக பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளில் தமது படையினர் செய்துள்ள தியாகம் குறித்து தான் கேமரூனிடம் நேரடியாகத் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் சந்திப்புக்குப் பிறகு கனிவான வார்த்தைகளையே அவரும் வெளியிட்டார்.
கமரூனுக்கு அழைப்பு
'புயல்கள் வரலாம் போகலாம், ஆனால் பாகிஸ்தானும் பிரிட்டனும் இணைந்து அனைத்து பிரச்சனைகளையும் கண்ணியத்துடன் எதிர்கொண்டு, இந்த உலகம் மேலும் சிறந்த இடமாவதற்கு தேவையானவற்றை நாம் செய்வோம்' என்றார் சர்தாரி.
விரைவில் பாகிஸ்தானுக்கு வருமாரு அதிபர் சர்தாரி விடுத்த அழைப்பை கேமரூன் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக