குருநகர் கலாசார மண்படத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்று இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு காணிக்கச்சேரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இந்நடவடிக்கைக்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை விட மேலும் சில மக்கள் குடியிருப்புப் பகுதிகள் படையினர் வசம் இருப்பதாகவும் அவற்றையும் மீட்டுத்தர வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அமைச்சர் அவர்கள் படிப்படியாக ஏனைய பகுதிகளையும்; விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சீமெந்து இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் குறிப்பாக வசதி வாயப்;புகள் நிறைந்த வளமான வாழ்வை வாழ வழியேற்படுத்தி தரப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.
இங்கு மக்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் அவர்களுடன் யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சுகுணாரதி தெய்வேந்திரம் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் உடனிருந்தனர்.
குருநகர் புதிய கடற்கரை வீதிக்குச் சென்று அதனைப் பார்வையிட்ட அமைச்சர் அவர்கள் வீதியைப் புனரமைப்பது தொடர்பாகவும் எதிர்காலத்தில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
தொடர்ந்து குருநகர் 5மாடி வீட்டுத்திட்டத்திற்கு அண்மையாக உள்ள இறால் பண்ணைத் திட்டத்தையும் அமைச்சர் அவர்கள்; பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த பொதுக்கிணறுகளைப் பார்வையிட்டதுடன் அவற்றைச் சுத்தப்படுத்தி மக்களின் தேவைக்கு பயன்படும் விதத்தில் ஒழுங்கமைத்து தருவதாகவும் அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.
இதனிடையே அப்பகுதி சுகாதாரம் தொடர்பாகவும் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதற்காக குருநகர் அபிவிருத்தி சங்கத்தை மேலும் விஸ்தரிப்புச் செய்யும் வகையில் பிரதேச செயலாளர் யாழ்.மாநகர மேயர் கிராம அலுவலர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கி பொது நிதியத்தை உருவாக்கி அதனூடாக சிரமதானப் பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அதன் மூலமே சுகாதாரத்தை கடைப்பிடிக்க முடியுமென்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து 5 மாடி விளையாட்டு மைதானத்தையும் அமைச்சர் அவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது








.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக