கடுகன்னாவை, தந்துரை பகுதியில் அமைந்துள்ள ரேன்கோ குடைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த தீ, ஏனைய கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு பரவாமல் கடுகன்னாவை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று பல மணி நேரங்கள் வரையில் நீடித்த இந்த தீ விபத்து ,தொழிற்சாலையை முற்றாக சேதமாக்கியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று கூறினர்.
தீயணைப்பு படையினர், தொழிற்சாலைக்கு அருகில் குடியுள்ள பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் நேற்று இரவுக்குள் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று கூறிய அவர், இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு குறித்து தற்போதைக்கு கூற முடியாது என்றும், பல மில்லியன் கணக்கான சொத்துக்கள் இதன்போது அழிவடைந்திருக்கலாம் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக